Ad sense

Thursday, October 22, 2015

ஆஷூரா நோன்பின் சிறப்பு

💥💥ஆஷூரா நோன்பின் சிறப்பு:💥💥

🔹சிறந்த நோன்பு:
       ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். இதுவல்லாது  பல சுன்னத்தான நோன்புகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளில் சிறந்ததாக ஆஷுரா நோன்பு அமைந்துள்ளது.

🔹‘ரமழான் மாத நோன்புக்குப் பின்னர் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்…..’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பர்: அபூ ஹூரைரா(ரலி)
📚ஆதாரம்: அபூ தாவூத்- 2429, திர்மிதி- 438-740, நஸாஈ- 1613

🔹பாவங்களைப் போக்கும்:
      ‘முஹர்ரம் பத்தாம் நாள் நோற்கும் நோன்பு முந்தைய வருடத்தில் இடம்பெற்ற (சிறிய) பாவங் களைப் போக்கிவிடும் என நான் நினைக்கின்றேன்’ என நபி(ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா(ரலி)
📚ஆதாரம்: இப்னுமாஜா- 1738, அபூதாவூத்- 2425, திர்மிதி- 752

(அறிஞர் அல்பானி (ரஹ்), சுஅய்ப் அல் அர்னாஊத் ஆகியோர் இதனை ஸஹீஹான அறிவிப்பு என்று கூறுகின்றனர்.)

இந்த நபிமொழி ஆஷுரா நோன்பு கடந்த வருடத்தில் நடந்த (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்ற நற்செய்தியைக் கூறி ஊக்குவிப்பதைக் காணலாம்.

🔹ஏன் நோற்கப்படுகின்றது:
இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார். ‘நபி(ஸல் ) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரி களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை)  அவர்கள் நோன்பு நோற்றார் கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள். ‘
📚(புஹாரி: 2004, 3397)

🔹யூதர்களுக்கு மாறு செய்தல்:
நபி ( ஸல் )  அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று எம்மையும் நோற்குமாறு ஏவினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! யூதரும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் ஒரு நாளாயிற்றே’ என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ‘அடுத்த வருடம் நான் இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். அடுத்த வருடம் முஹர்ரம் வருவதற்கு முன் நபி (ஸல்) வபாத்தாகிவிட்டார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி )
📚ஆதாரம்: அபூதாவூத் 2445

இந்த செய்தி யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்வதையும் முஸ்லிம் உம்மத் தனது தனித்துவத்தைப் பேணுவதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகின்றது. நாகரிகம் என்ற பெயரில் அந்நிய சமூகங்களுக்கு ஒப்பாக நடப்பதையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் கரைந்து காணாமல் போவதையும் இஸ்லாம் விரும்பவில்லை.

♦♦முஹர்ரம் மாதத்தையொட்டி ஏராளமான பித்அத்துக்களும், கட்டுக் கதைகளும் உள்ளன. இம்மாதத்தில்தான் கர்பலா போர் நடந்தது. இதில் ஹுஸைன்(ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த சோக நிகழ்வுதான். நபி(ஸல்) அவர்களின் பேரர், சுவனத்தைக் கொண்டும் சுபசோபனம் சொல்லப்பட்டவர். அலி, பாத்திமா தம்பதிகளின் புதல்வர் கொல்லப்பட்டது சோக சம்பவம்தான். இருப்பினும் இத்தினத்தை ஷீஆக்கள் துக்க தினமாகக் கொண்டாடு கின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த இடம்பாடும் இல்லை. இவர்கள் ஹுஸைன்(ரலி) மீதான அன்பில் இதைச் செய்யவில்லை. உமையாக்களுக்கு எதிரான உணர்வுகளை ஊட்டுவதற்காகவும் ஷீஆயிசத்தைப் பரப்பவுமே இந்த வழிகேட்டை அரங்கேற்றி வருகின்றனர். அலி(ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அதற்கு துக்கம் கொண்டாடாதவர்கள் ஹுஸைன்(ரலி ) அவர்களின் கொலைக்காக மட்டும் துக்கம் கொண்டாடுவதன் இரகசியம் இதுதான்.

எனவே, முஹர்ரம் சிறப்பானது. முஹர்ரத்தின் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள், பித்அத்துக்கள் ஆபத்தானவை, அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை என்பதைப் புரிந்து செயற்படுவோமாக.

No comments: