Ad sense

Thursday, January 2, 2014

நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:

மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ,
மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய
மூன்று பள்ளிவாசல்களைத் தவிர
வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக
நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம்
மேற்கொள்ளப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.

புகாரி : 1189

(குறிப்பு: இறையில்லம்
கஅபா அமைந்துள்ள
பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும்.
மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள்
கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ
எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள
புனிதப் பள்ளிவாசலே மஸ்ஜிதுல்
அக்ஸா ஆகும்.)

நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ)
பள்ளியில் தொழுவது ஏனைய
பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம்
தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்.
ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல்
ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.

புகாரி : 1190

ஜிசக் அல்லாஹு ஹைரன்: அல்லாஹ்வின் அடிமை, முகநூல் 

No comments: