Ad sense

Tuesday, December 31, 2013

குர்ஆன் தடுத்து விட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர ்(களான இறைமறுப் பாளர்கள், நயவஞ்சகர்) களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு...!!!

புகாரி : 4476

நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:

மறுமை நாளில்
இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி
, (நமக்கு ஏற்பட்டுள்ள
துன்பங்களிலிருந்து நம்மைக்
காக்கும்படி யார் மூலமாவது) நம்
இறைவனிடம் நாம் மன்றாடினால்
(எவ்வளவு நன்றாயிருக்கும்!)
என்று (தங்களிடையே) பேசிக்
கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்
(அலை) அவர்களிடம் வந்து, நீங்கள்
மனிதர்களின் தந்தையாவீர்கள்.
அல்லாஹ், தன் கையால் உங்களைப்
படைத்தான். தன்னுடைய
வானவர்களை உங்களுக்குச் சிரம்
பணியச் செய்தான். மேலும்,
உங்களுக்கு எல்லாப் பொருள்களின்
பெயர்களையும் கற்றுத் தந்தான்.
எனவே, இந்த(ச் சோதனையான)
கட்டத்திலிருந்து எங்களை
விடுவிப்பதற்காக உங்களுடைய
இறைவனிடத்தில் எங்களுக்காகப்
பரிந்துரை செய்யுங்கள்
என்று சொல்வார்கள்.
அதற்கு ஆதம்
(அலை) அவர்கள், (நீங்கள்
நினைக்கும்) அந்த நிலையில் நான்
இல்லை என்று கூறிவிட்டு, தாம்
புரிந்த பாவத்தை நினைத்துப்
பார்த்து வெட்கப்படுவார்கள்.

நீங்கள்
(நபி) நூஹ் அவர்களிடம்
செல்லுங்கள். ஏனென் றால், அவர்
(எனக்குப் பின்)
பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ்
அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில்
முதலாமவர் ஆவார்
என்று சொல்வார்கள்.
உடனே, இறை நம்பிக்கையாளர்கள்
நூஹ் (அலை) அவர்களிடம்
செல்வார்கள். அப்போது அவரும்,
(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில்
நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம்
அறியாத ஒன்றைக் குறித்துத் தம்
இறைவனி டத்தில்
கேட்டதை நினைத்து வெட்கப்படு
வார்கள்.

பிறகு, நீங்கள்
கருணையாளனின் உற்ற நண்பரிடம்
ளஇப்ராஹீம் (அலை) அவர் களிடம்ன
செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, இறை நம்பிக்கையாளர்கள்
(இப்ராஹீம் -அலை) அவர்களிடம்
செல்வார்கள். அப்போது அவர்களும்,
(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில்
நான் இல்லை. அல்லாஹ்
உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும்
அளித்த அடியாரான (நபி) மூசாவிடம்
நீங்கள் செல்லுங்கள்
என்று சொல்வார்கள்.

உடனே,
அவர்கள் மூசா (அலை) அவர்களிடம்
செல்வார்கள். அப்போது அவர்கள்,
(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில்
நான் இல்லை என்று கூறிவிட்டு,
(தம்
வாழ்நாளில் ஒருமுறை) எந்த
உயிருக்கும் ஈடாக இல்லாமல்
ஒரு (மனித) உயிரைக்
கொன்றதை நினைவு கூர்ந்து தம்
இறைவனுக்கு முன்
வெட்கப்படுவார்கள்.

பிறகு, நீங்கள்
அல்லாஹ்வின் அடியாரும்,
அவனுடைய தூதரும், அவனுடைய
வார்த்தையும், அவனுடைய
ஆவியுமான (நபி) ஈசாவி டம்
செல்லுங்கள் என்று சொல்வார்கள்.
(அவ்வாறே அவர்கள் செல்ல,)
அப்போது அவர்களும், (நீங்கள்
நினைக்கும்) அந்த நிலையில் நான்
இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள்
மன்னிக்கப்பட்ட அடியாரான
முஹம்மத் (ஸல்) அவர்களிடம்
செல்லுங்கள் என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம்
வருவார்கள். அப்போது நான்,
என்னுடைய இறைவனிடத்தில்
அனுமதி கேட்பதற்காகச் செல்வேன்.
அப்போது (எனக்கு)
அனுமதி வழங்கப்படும். என்
இறைவனை நான் காணும்
போது சஜ்தாவில் விழுவேன்.
தான் விரும்பியவரையில் (அப்படியே)
என்னை அவன் விட்டு விடுவான்.
பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து)
உங்கள் தலையை உயர்த்துங்கள்!
கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்.
சொல்லுங்கள்; செவியேற்கப்படும்.
பரிந்துரை செய்யுங்கள்;
உங்கள்
பரிந்துரை ஏற்கப்படும்
என்று சொல்லப்படும். அப்போது நான்
எனது தலையை உயர்த்தி, இறைவன்
எனக்குக் கற்றுத் தரும் புகழ்
மொழிகளைக் கூறி அவனைப்
புகழ்வேன்.
பிறகு நான்
பரிந்துரை செய்வேன்.
அப்போது இறைவன், (நான் யார்
யாருக்குப் பரிந்துரை செய்யலாம்
என்பதை வரையறுத்து)
எனக்கு வரம்பு விதிப்பான்.
பிறகு அவர்களை நான்
சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
பிறகு மீண்டும் நான் இறைவனிடம்
செல்வேன். என் இறைவனைக் காணும்
போது நான்
முன்பு போலவே செய்வேன்.
பிறகு நான் பரிந்துரைப்பேன்.
அப்போதும் இறைவன், (நான் யார்
யாருக்குப் பரிந்துரை செய்யலாம்
என்பதை வரையறுத்து)
எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு,
நான் அவர்களைச்
சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
பிறகு மூன்றாம் முறையாக
(இறைவனிடம்) நான் செல்வேன்.
பிறகு நான்காம் முறையும்
செல்வேன். (இறுதியாக) நான்,
குர்ஆன் தடுத்து விட்ட, நிரந்தர நரகம்
கட்டாயமாகிவிட்டவர
்(களான
இறைமறுப் பாளர்கள், நயவஞ்சகர்)
களைத் தவிர வேறு யாரும் நரகத்தில்
மிஞ்சவில்லை என்று சொல்வேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்
கிறார்கள்.

Jizak Allahu Khiaran Sister Allah vin Adimai (facebook)

No comments: